Popular Posts

ரகசிய சுவிஸ் வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்

on Monday, April 18, 2011
சுவிஸ் வங்கிகளில் முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் போட்டு வைத்துள்ள பணம் குறித்த விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிடப்போவதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

இதுவரை அமெரிக்க தூதரக ரகசியக் கடிதங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த விக்கிலீக்ஸ் தற்போது சுவிஸ் வங்கிக் கணக்குகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது.

முக்கியமான சுவிஸ் வங்கியான ஜூலியஸ் பேயர் வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ருடால்ப் எல்மர். இவர் தனது வங்கியில் கணக்கு வைத்துள்ள பல்வேறு நாட்டுப் பிரபலங்கள், அவர்களுக்கு எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய சிடியை அசாஞ்சேவிடம் ஒப்படைத்துள்ளார்.

லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் இதைக் கொடுத்தார் எல்மர். இதைப் பெற்றுக் கொண்ட அசாஞ்சே, எல்மருக்கு நன்றி கூறினார். பின்னர் இதில் உள்ள விவரங்களைப் பரிசோதித்த பின்னர் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் இவை அனைத்தும் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சிடியில் ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஜூலியஸ் பேயர் வங்கியில் போட்டு வைத்துள்ள பணம் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளதாம்.

இதையடுத்து இந்த வங்கியில் ரகசியமாக பணம் போட்டு வைத்துள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, வங்கி ரகசிய காப்பு உத்தரவாதத்தை மீறியதற்காக எல்மர் மீது சுவிடசர்லாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் அதை தான் பொருட்படுத்தவில்லை என்றும், வரி ஏய்ப்பு செய்வோரையும், ஊழல் செய்வோரையும் தான் அம்பலப்படுத்தும் நோக்கிலேயே இதுகுறித்த தகவல் அடங்கிய சிடிக்களை விக்கிலீக்ஸிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதமே எல்மர் அவரது வங்கியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment